உழவர் சந்தையில் 38 டன் காய்கறிகள் விற்பனை

தர்மபுரி உழவர் சந்தையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காய்கறிகள் விற்பனை அமோகம், 38 டன் காய்கறிகள் விற்பனை அதிகாரி தகவல்,

Update: 2025-01-01 04:04 GMT
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. தினசரி 8 லட்சம் மதிப்பிற்கான 30 டன் காய்கறி மற்.றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், நேற்று டிசம்பர் 31, 60 வகையான காய்கறி மற்றும் பழங்கள் என மொத்தமாக 38 டன் காய்கறிகள் ரூ.16 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தர்மபுரி உழவர் சந்தை நிர்வாக அலுவலர் இளங்கோ தெரிவித்து உள்ளார். மேலும் நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து உழவர் சந்தை முழுவதும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது

Similar News