மாற்றுத்திறனாளிக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ... அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா ஃ பாண்டியராஜன் துவக்கி வைத்த இந்த நிகழ்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்ப்பு ....*

மாற்றுத்திறனாளிக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ... அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா ஃ பாண்டியராஜன் துவக்கி வைத்த இந்த நிகழ்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்ப்பு ....*;

Update: 2024-12-29 12:23 GMT
விருதுநகரில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு காமராஜர் சமூக நல அறக்கட்டளை மற்றும் ஷெல் டிரஸ்ட் இணைந்து நடத்திய மாபெரும் மாற்றுத்திறனாளிக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ... அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா ஃ பாண்டியராஜன் துவக்கி வைத்த இந்த நிகழ்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்ப்பு .... தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுவருகிறது. அதனை முன்னிட்டு இன்று விருதுநகரில் உள்ள தனியார் உதவி பெறும் ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் வைத்து காமராஜர் சமூகநல அறக்கட்டளை, ஷெல் டிரஸ்ட் இணைந்து நடத்தும் மாபெரும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கலந்து கொண்டு 13 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ 50000 மதிப்புள்ள இருசக்கர வாகனம், காது கேட்கும் கருவியை வழங்கினார் மேலும் 50 பயனாளிகளுக்கு வாக்கிங் ஸிடிக் மற்றும் 10 கிலோ அரிசி பையை ஷெல் டிரஸ்ட் நிறுவனர் மகேந்திரன் வழங்கினார் மேலும் பொதுமக்கள் அனைவரும் பயன் பெறும் வசையில் இலவச மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் இந்தி நிகழ்வில் நிழல் அறக்கட்டளை, ஒளி பார்வையற்றோர் நல அறக்கட்டளையும் இணைந்து இந்த மருத்துவ முகாமினை நடத்தினர்

Similar News