பாராட்டு சான்றிதழ் வழங்கிய கலெக்டர்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் அய்யன் திருவள்ளுவர் திருவுருவ சிலை வெள்ளி விழா கொண்டாட்டம் தொடர்பாக மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்திய திருக்குறள் ஒப்புவித்தல்,வினாடி வினா மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் கார்த்திகேயன் நேற்று (டிசம்பர் 31) வழங்கினார்.