வரஞ்சரம் அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது,வேளாக்குறிச்சியை சேர்ந்த தங்கராசு மகன் கோவிந்தராஜ்,54; என்பவர் தனது கடைக்கு எதிரேமதுபாட்டில் விற்றது தெரிந்தது. இதையடுத்து, கோவிந்தராஜை கைது செய்து, அவரிடமிருந்த 5 மதுபாட்டில்களைபோலீசார் பறிமுதல் செய்தனர்.