பொதுமக்களை அரிவாள் கொண்டு மிரட்டிய நபர் கைது.
மதுரை மாவட்டம் அரிவாள் கொண்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் பெருங்குடி அருகே உள்ள நல்லூர் நடுத்தெரு வசிக்கும் முகமது இதிரீஸ் (30) என்பவர் நல்லூர் பள்ளிவாசல் பகுதியில் நேற்று (டிச.31). மதியம் அரிவாள் கொண்டு பொதுமக்களை மிரட்டி வருவதாக ரோந்து பணியில் இருந்த பெருங்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதிக்கு போலீசார் சென்றபோது போலீசை கண்டதும் முகமது இதிரீஸ் தப்பி ஓட பார்த்தார். போலீசார் விரட்டி பிடித்து கைது செய்து அவரிடமிருந்து அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.