குளியல் அறையில் ஜேசிபி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

Update: 2025-01-01 14:36 GMT
திருவரங்கம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 25)ஜேசிபி டிரைவர். இந்நிலையில் இவருக்கு அடிக்கடி வயிற்று வலி வருமாம். இதையடுத்து மகேஸ்வரன் தனது வீட்டின் குளியலறையில் நேற்று தூக்கு மாட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் திருவரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மகேஸ்வரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News