ஜெயங்கொண்டம் அருகே கார் மோதி மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த ஹோட்டல் உரிமையாளரின் மகன் பலி ஒருவர் காயம்.
ஜெயங்கொண்டம் அருகே கார் டூவீலர்கள் மோதிய விபத்தில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த ஹோட்டல் உரிமையாளரின் மகன் பரிதாபமாக உயிரிழந்தார் வண்டி ஓட்டி வந்த கலியபெருமாள் தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காரில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர்.
அரியலூர், ஜன.2- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பூசாரி தெருவை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் பழனி என்பவரின் மகன் தினேஷ்குமார் (28) (திருமணமாகாதவர்) இவரும் இவரது நண்பருமான இடையாறு கிராமம் மேலத்தெருவை சேர்ந்த கலியபெருமாள் (26) என்பவர் வண்டி ஓட்ட இருவரும் மோட்டார் சைக்கிளில் சின்னவளையம் சொந்த அலுவல் காரணமாக வந்துவிட்டு மீண்டும் உடையார்பாளையம் நோக்கி பெரியவளையம் பைபாஸ் சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர் அப்போது திருச்சியிலிருந்து மீன்சுருட்டி நோக்கி வந்த கார் கலியபெருமாள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் பலத்த காயம் அடைந்தனர் இதில் தினேஷ்குமார் மட்டும் 20 அடி உயரமுள்ள சின்னவளையம் பைபாஸ் பெரிய வளையம் பிரிவு சாலையில் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் அவரது நண்பர் கலியபெருமாள் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த கலியபெருமாளை ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதில் காரில் பாதுகாப்பு உபகரணங்கள் இருந்ததால் காரில் பயணித்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..