பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம்.
மதுரையில் பள்ளி கல்லூரிகளில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து காவல்நிலைய பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று ( ஜன.2) நடத்தப்பட்டது. இதில் காவல்துறையினர் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.