வேப்பனப்பள்ளி: வாழை தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்.

வேப்பனப்பள்ளி: வாழை தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம்.

Update: 2025-01-02 23:46 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை வனப்பகுதியில் இருந்து இரண்டு காட்டு யானைகள் நேற்று முன்தினம் இரவு வேப்பனப்பள்ளி அடுத்த தாமண்டரப்பள்ளி மற்றும் சிகரமா கனப்பள்ளி வனப்பகுதிக்கு வந்தது. தொடர்ந்து சிகராமனப் பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானை நேற்று இரவு பன்ரேவ் என்ற கிராமத்தில் புகுந்து விவசாயி ராஜா என்பவரின் வாழை தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்தது. மேலும் தாமண்டரப்பள்ளி கிராமத்தில் முகாமிட்டிருந்த மற்றொரு காட்டு யானை அப்பகுதியில் இருந்த மா மரம் மற்றும் வாழை தோட்டங்களில் புகுந்து அங்கிருந்த மரங்களை நாசம் செய்துள்ளது. காட்டு யானைகள் சிகரப்பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டு அப்பகுதியில் அட்டகாசம் செய்து வருகிறது.

Similar News