பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம் துவக்கம்

துவக்கம்

Update: 2025-01-05 05:06 GMT
தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆர்.கே.எஸ்., கல்லுாரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திருஞானசம்பந்தம் தலைமை தாங்கினார். ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி, தாளாளர் குமார், செயலாளர் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தனர். ஆர்.கே.எஸ்., கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். வணிகவியல் உதவி பேராசிரியர் ராஜா திட்ட விளக்க உரையாற்றினார்.செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில், ஆங்கிலத்துறை பேராசிரியர் ேஹமலதா, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.

Similar News