கள்ளக்குறிச்சி 'ஐ ஷெட்டல் ஸ்டுடியோ' மைதானத்தில் தமிழ்நாடு மாநில அளவிலான 11 வயதிற்குட்பட்டோருக்கான இறகுப்பந்துப் போட்டியினை கலெக்டர் துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் சாலையில் உள்ள 'ஐ ஷெட்டல் ஸ்டுடியோ' மைதானத்தில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டிகள் நடக்கிறது. கள்ளக்குறிச்சியில் முதல் முறையாக மாநில அளவிலான 11 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளுக்கென நடக்கும் இப்போட்டிகளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண், பெண் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.5-ம் தேதி வரை நடக்கும் இறகுப்பந்து போட்டி-களை கலெக்டர் பிரசாந்த் நேற்று துவக்கி வைத்து பேசியதாவது : விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதினால் ஆரோக்கியம் மற்றும் தன்னம்பிக்கை வளரும். விளையாட்டு வீரர்களுக்கு தோல்வி நிரந்தரம் அல்ல. தோல்வியிலிருந்து வெற்றிக்கான பாடத்தை கற்றுக் கொண்டால் வாழ்வு சிறக்கும். என தெரிவித்தார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட இறகுப் பந்து கழக தலைவர் ரவி, செயலாளர் பிரதீப்சந்த், பொருளாளர் பரத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.