சேலத்தில் காதல் திருமணம் செய்த வெல்டிங் தொழிலாளி தற்கொலை
போலீசார் விசாரணை
சேலம் ஜட்ஜ்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 26). வெல்டிங் தொழிலாளி. இவர் சாரதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். புத்தாண்டை முன்னிட்டு சாரதா தனது அம்மா வீட்டிற்கு அழைத்து உள்ளார். ரஞ்சித் மறுக்கவே இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்துனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.