பெண்ணிடம் தாலிச் செயின் பறிப்பு

பறிப்பு

Update: 2025-01-03 04:15 GMT
கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமந்துார் பம்புதோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் மனைவி மீனா,55; இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு குடும்பத்துடன் வீட்டில் துாங்கியுள்ளார். நள்ளிரவு 1.45 மணியளவில் கதவு திறப்பது போல் சத்தம் கேட்டதால், மீனா எழுந்து வந்து பார்த்துள்ளார். அப்போது லேசாக கதவு திறந்து இருந்ததால், அதனை மூடச் சென்றபோது வெளியே இருந்த மர்ம ஆசாமி, மீனாவின் கழுத்திலிருந்த தாலி செயினை பறித்துள்ளார். உடன் மீனா செயினை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டுள்ளார். தொடர்ந்து அவரது கணவர் ஜெகதீசன் எழுந்து வருவதற்குள், மீனாவின் கழுந்திலிருந்து தாலி செயின் பாதி அறுந்து, 17 கிராம் நகையினை பறித்து சென்றுள்ளார். மேலும், வீட்டின் பின்பக்கத்தில் இருந்து இருவர் உட்பட 3 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, மர்ம ஆசாமிகள் மூன்று பேரை தேடி வருகின்றனர்.

Similar News