திமுகவினர் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்.
மதுரை திருமங்கலம் அருகே திமுகவினர் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டார்.
மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க வருகை தரும் துணை முதலமைச்சர், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை எழுச்சியோடு வரவேற்பது மற்றும் ஆக்கப்பணிகள் தொடர்பான மதுரை தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று (ஜன.5) திருமங்கலம் நான்கு வழிச்சாலை பகுதியில் நடைபெற்றது. இதற்கு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார். உடன் மாவட்ட செயலாளர் மணிமாறன், முன்னாள் எம்.ல்.ஏகள், திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.