தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் 2025 காலண்டர் : மேயர் வெளியிட்டார்!
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் 2025 காலண்டர் : மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டார்!
தூத்துக்குடியில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் 2025ம் ஆண்டிற்கான காலண்டரை மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டார். தூத்துக்குடி மாநகர் மாவட்ட தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் காலண்டர் வெளியிடப்படும். இந்நிலையில், 2025ம் ஆண்டிற்கான வண்ண மாத காலண்டரை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டார். மாநகர் மாவட்ட தலைவர் சக்தி. ஆர்.முருகன் புதிய காலண்டரை பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சங்க உறுப்பினர்களுக்கு காலண்டர் மற்றும் டைரிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சங்க துணைத் தலைவர் சண்முக ஆனந்த், பொருளாளர் ஞானதுரை, மூத்த பத்திரிக்கையாளரும் கெளவர தலைவருமான குமாரவேல், கல்விச் செய்திகள் ஆசிரியர் பொன் பலவேசராஜ், பொறுப்பாளர்கள் இமானுவேல் குணசிங், சித்த மருத்துவர் வேம்புகிருஷ்ணன், மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.