சங்கரன்கோவிலில் எரிவாயு உருளை ஏற்றும் சுமை ஆட்டோவில் தீ

எரிவாயு உருளை ஏற்றும் சுமை ஆட்டோவில் தீ

Update: 2025-01-07 02:57 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள களப்பாகுளத்தைச் சோ்ந்த குருசாமி மகன் அய்யாதுரை. சங்கரன்கோவில் பிரதானசாலையில் உள்ள சமையல் எரிவாயு விநியோக நிறுவனத்தில், சுமை ஆட்டோ மூலம் எரிவாயு உருளைகள் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாா். இவா் நேற்று இரவு பணி முடிந்ததும் சுமை ஆட்டோவை வாகன பழுது நீக்கும் கடைக்கு கொண்டுசென்று பழுதுபாா்த்துவிட்டு, வீட்டுக்கு காய்கனி வாங்குவதற்காக கனரா வங்கி அருகில் ஆட்டோவை நிறுத்திச் சென்றாராம். இந்நிலையில் அந்த ஆட்டோ திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில், சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் வீரபத்திரன் தலைமையில் வீரா்கள் வந்து தீயை அணைத்தனா். சுமை ஆட்டோவில் எரிவாயு உருளைகள் இல்லாததால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது. இதுகுறித்து சங்கரன்கோவில் நகர காவல்நிலையப் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Similar News