பெரம்பூர் பகுதியில் நாளை(சனிக்கிழமை)மின் நிறுத்த அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் கடக்கம் பகுதியில் நாளை சனிக்கிழமை மின் நிறுத்தும் செய்யப்படுவதாக தமிழ்நாடு மின் பகிர்மான கழக மயிலாடுதுறை உதவி செய்ய பொறியாளர் தெரிவித்துள்ளார்;
மயிலாடுதுறை கோட்டத்தில் எதிர்வரும் 04:01:2025 சனிக்கிழமை அன்று பெரம்பூர் துணைமின் நிலையத்தில் இருந்து வரும் 11 கிலோ கடக்கம் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி மேற்க்கொள்ள இருப்பதால் கடக்கம் உயரழுத்த மின்பாதையில் இருந்து மின் விநியோகம் பெறும் பெரம்பூர், வதிஷ்டாச்சேரி, முத்தூர், கடக்கம்,கோவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை மின்சாரம் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் அன்றையதினம் மின் நிறுத்தம் செய்வது மின் கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுந்து கடைசி நேர மாறுதலுக்குட்ப்பட்டது என தமிழ்நாடு மின் உற்ப்பத்தி மற்றும் பகிர்மான கழகம் புறநகர்,மயிலாடுதுறை உதவிசெயற்பொறியாளர் S.பாலமுருகன்.ME(இயக்கமும் & பராமரிப்பும்) தெரிவித்துள்ளார்.