காங்கேயம் அருகே கோவில் பிரச்சனை அரசு அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

காங்கேயம் காடையூர் அருகே உள்ள கோவிலில் நாடார் சமூகத்தைச் பொதுமக்கள் பயன்படுத்தி வந்ததாகவும் தற்போது தனியார் தோட்டத்தின் உரிமையாளர் பூட்டி வைத்து பொதுமக்களை அனுமதிப்பதில்லை எனவும் மேலும் இதற்கு  வருவாய்த் துறை அதிகாரிகள்  உடந்தையாக செயல்படுவதாக கூறி காங்கேயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update: 2025-01-04 15:32 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காடையூர் அருகே உள்ள கோவிலில் நாடார் சமூகத்தைச் பொதுமக்கள் பயன்படுத்தி வந்ததாகவும் தற்போது தனியார் தோட்டத்தின் உரிமையாளர் பூட்டி வைத்து பொதுமக்களை அனுமதிப்பதில்லை எனவும் மேலும் இதற்கு  வருவாய்த் துறை அதிகாரிகள்  உடந்தையாக செயல்படுவதாக கூறி காங்கேயம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கேயம் அடுத்த காடையூர் அருகே உள்ள பசுவன்மூப்பன்வலசு பகுதியில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த பொது மக்களுக்கு சொந்தமான குலதெய்வம் கோவிலை மாற்று சமுதாயத்தினர் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் வழிபட இடையூறு செய்வதாகவும் குற்றம் சாட்டி வந்தனர். பசுவன்மூப்பன்வலசு பகுதியில் உள்ள நாடார் சமுதாயத்தின் ஸ்ரீ மீனாட்சி அம்மன் பிரசன்ன ஸ்ரீ கருங்குட கருப்பணசாமி மற்றும் ஸ்ரீ காணியாளசுவாமி கோவில்கள் மாற்று  சமூகத்தின் தோட்டத்திற்கு உள்ளே உள்ளதாகவும் இதனால்  ஒவ்வொரு முறையும் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றால் அவர்களிடம் சாவியை வாங்கி செல்ல வேண்டியுள்ளதாகவும், மேலும் இந்த கோவிலானது 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது  என்றும் காலம் காலமாக எங்கள் முன்னோர்கள் இங்கு வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. கோவில்  இடத்தை மீட்டுத் தரவும் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இரு தரப்பினருக்கு சுமுக முடிவு எட்டப்படவில்லை. தற்போது பசுவன்மூப்பன்வலசு என்ற ஊரின் பெயர் பலகையை அகற்றிவிட்டு தற்போது  பசுவன்வலசு என மாற்றுவதற்கு முயற்சி செய்வதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. கோவிலுக்கு அருகாமையில் நீரோடை இருந்ததாகவும் தற்போது அந்த நீரோடை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் தாராபுரம் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அகியோர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அதனால் வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்து இன்று காங்கேயம் பேருந்து நிலையத்திற்குள் இமானுவேல் நாடார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் புதிய திராவிட கழகத்தினருடன்  இணைந்து வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மீண்டும் மாவட்ட ஆட்சியரை 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களை திரட்டி நேரில் சந்தித்து நியாயம் கேட்டு முறையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Similar News