அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டிய மர்ம நபர்கள்

கண்டுகொள்ளாத நீர்வளத் துறையை கண்டித்து விசிக சாலை மறியல் போராட்டம்;

Update: 2025-01-05 02:52 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே காவிரியின் தென்கரை பகுதியான குமாரமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து கோவை கேஸ் பங்க் வரை நீர்வளத் துறைக்கு சொந்தமான நீர்நிலை புறம்போக்கு இடங்களில் பல வருடங்களாக இருந்து வந்த நூற்றுக்கு மேற்பட்ட புளிய மரம், வேப்பமரம், ஆயிரத்திற்கு மேற்பட்ட மூங்கில் போன்ற உயிருள்ள மரங்களை அதிகாரிகள் துணையுடன் மர்ம நபர்கள் வெட்டி உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத குளித்தலை நீர்வளத் துறை அதிகாரிகளை கண்டித்து மரங்கள் வெட்டப்பட்ட இடமான பைபாஸ் அருகில் விரைவில் சாலை மறியல் போராட்டம் செய்ய போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News