சூலூர்: வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்தநாள் !
கோவை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழக மகளிர் அணி சார்பில் வேலு நாச்சியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தமிழக வெற்றி கழகத்தின் கோவை கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில், வீரமங்கை வேலு நாச்சியாரின் 295வது பிறந்தநாள் விழா சூலூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில், வேலு நாச்சியாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு, தங்களது மரியாதையை செலுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய மகளிர் அணி நிர்வாகிகள், வீரமங்கை வேலு நாச்சியாரின் தியாகங்கள் மற்றும் பெண்கள் விடுதலைக்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்து பாராட்டினர். அவரது போராட்ட உணர்வை இன்றைய இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினர். தமிழக வெற்றி கழகத்தின் இந்த சிறப்பான நிகழ்ச்சி, வீரமங்கை வேலு நாச்சியாரை நினைவு கூறும் வகையில் அமைந்தது.