விஜயகாந்த் புகைப்படம் பொறிக்கப்பட்ட நாணயம்
மக்கள் முன்னேற்ற பொது நல சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை
நாகை மாவட்டம் திருமருகலில், மக்கள் முன்னேற்ற பொதுநல சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, சங்க மாநில தலைவர் விஜயராகவன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் உலகநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமலை ஐயப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, ஒன்றிய செயலாளர் தினேஷ் குமார் வரவேற்றார். கூட்டத்தில், மறைந்த நடிகரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தின் நினைவு கூர்ந்து, மத்திய அரசு விஜயகாந்த் புகைப்படம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியிட வேண்டும். விஜயகாந்தின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களின் பாட புத்தகங்களில் பதிவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர் விக்னேஷ், ஒன்றிய மகளிர் அணி தலைவி கோமதி, மகளிர் அணி செயலாளர் கார்த்திகா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாநில செயற்குழு உறுப்பினர் குமார் நன்றி கூறினார்.