தேனி மழை சாரல், ஜெகதீஷ் பிராய்லர் மற்றும் நகை அடகு கடை சார்பில் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
விருது;
தேனியை சேர்ந்த யூடூப்பர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழகத்தை சேர்ந்த பிரபல யூட்யூபர்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான யூடியூப்பர்கள், திருநங்கைகள், சமூக ஆர்வலர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் சேவையைப் பாராட்டி விருது மற்றும் சால்வை, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேனியை சேர்ந்த வணக்கம் டா மாப்ள அருண்குமார் உள்ளிட்ட யூடியூப் பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.