தேன்கனிக்கோட்டை: இரும்பு கம்பி திருடிய மூன்று பேர் கைது.

தேன்கனிக்கோட்டை இரும்பு கம்பி திருடிய மூன்று பேர் கைது.

Update: 2025-01-06 01:54 GMT
கர்நாடக மாநிலம் பெங்களூரு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (62) இவர் ரியல் எஸ்டேட் அதிபரான இவருக்கு சொந்தமான நிலம் தேன்கனிக்கோட்டை அடுத்த சாலிவரம் பகுதியில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் அங்கு சென்ற போது அங்கு மூன்று பேர் இரும்பு கம்பிகளை திருட முயற்ச்சித்துக்கொண்டிருந்த போது இதை கவனித்த சீனிவாசன் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவர்களை பிடித்து தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் அவர்கள் கூச்சுவாடிபகுதியை சேர்ந்த செந்தில் (30) பிரேம்குமார் (24) சீனிவாசன் (29) ஆகிய மூன்று பேர் என தெரியவந்தது. இதை அடுத்து அவர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News