விவசாய நிலம் தானம்
வேளாண் அறிவியல் நிலையத்துக்கு 2.26 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்த விவசாயி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே புது வள்ளியம்பாளையத்தில் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அடுத்த அளுக்குளியை சேர்ந்த விவசாயி பழனிவேல் (60) என்பவர் தனக்கு சொந்தமான 2.26 ஏக்கர் நிலத்தை, வேளாண் அறிவியல் நிலையத்துக்கு தானமாக வழங்கினார்.அதற்கான பத்திரத்தை அறிவியல் நிலைய முதன்மை விஞ்ஞானி அழகேசனிடம் வழங்கினார். இது குறித்து அழகேசன் கூறுகையில்,இந்தியாவிலேயே முதல் முதலாக வேளாண் அறிவியல் நிலையத்துக்கு தானமாக நிலம் தந்த பெருமை பழனிவேலை சாரும். வேளாண் மேம்பாட்டு நடவடிக்கைக்காக குறிப்பாக புதிய விதை நாற்றங்கால் மற்றும் கிராம மேம்பாடு பணிகள், அது சார்ந்த ஆராய்ச்சி சுற்றுச்சூழலியல், சுற்றுலா சார்ந்த கட்டுமான அபிவிருத்தி பணிகளை நிறைவேற்ற 2.26 ஏக்கர் நிலத்தை தானமாக தந்துள்ளார் என்றார்.