மனநலம் பாதிக்கப்பட்டு தென்கரை விளையாட்டு மைதானத்தில் சுற்றி திரிந்த இளைஞரை மீட்ட சமூக ஆர்வலர்

சமூக ஆர்வலர்

Update: 2025-01-06 05:49 GMT
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை விளையாட்டு மைதானத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவின்றி சுற்றித்திரிந்த 34 வயது இளைஞரை ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் காவல் துறையினர் உதவியுடன் மீட்டு, பெரியகுளம் அரசு தலைமை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விடப்பட்டது. விசாரணையில் அவர் பழனியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இந்நிகழ்வு பொது மக்களிடையே பாராட்டை பெற்றது.

Similar News