கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்
பருவ மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்
அச்சிறுபாக்கம் பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 10 வது வார்டுக்கு உட்பட்ட நேரு நகர், 2வது குறுக்கு தெரு பகுதியில், 15க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன.கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, இப்பகுதியில் கழிவு நீர் கால்வாய் இல்லை. இதனால், மழைக்காலங்களில் மழை நீர் மற்றும் கழிவு நீர் வெளியேற முடியாமல், சாலையில் தேங்கி நின்றது.இப்பகுதியில், கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரி 10 வது வார்டு கவுன்சிலர் அகிலா மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி குடியிருப்பு வாசிகள் புகார் மனு அளித்து வந்தனர். இந்நிலையில், நிரந்தர தீர்வாக, 15-வது நிதி குழு திட்டத்தின் கீழ், 2023-- 24 நிதியாண்டில், 7.5 லட்சம் ரூபாய் மதிப்பில், 170 மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்கும் பணி, கடந்த இரண்டு மாதத்திற்கு முன் துவங்கப்பட்டது. பருவ மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணி, மீண்டும் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.