தேசிய சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் எஸ் பி துவங்கி வைத்தனர். 100க்கு மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணி

Update: 2025-01-06 06:30 GMT
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி மாதம் முழுவதும் நமது இலக்கு விபத்தில்லா தமிழ்நாடு என்ற தாரக மந்திரத்தை முன்வைத்து கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் ஏ.பி மகாபாரதி, எஸ்.பி ஸ்டாலின் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்து விழிப்புணர்வு உரையாற்றினர். பேரணியில் தலைக்கவசம் உயிர்க்கவசம், உரிமம் வாங்க 8 போடு, உயிரைக் காக்க ஹெல்மெட் போடு, சாலையில் அலைபேசி ஆபத்தாகும் நீ யோசி, மது அருந்தி வாகனம் ஓட்டாதே உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். இந்த விழிப்புணர்வு பேரணியில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து சாலை பாதுகாப்பு அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கிய பேரணியானது மயிலாடுதுறை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவடைந்தது.

Similar News