ட்ரெயின் டிக்கெட் பரிசோதகர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு

உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு பதிந்த மயிலாடுதுறை போலீசார் அவரை தேடி வருகின்றனர்;

Update: 2025-01-06 11:48 GMT
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் சென்னையில் பணியாற்றும் தனது கணவரை பார்த்துவிட்டு நேற்று முன் தினம் இரவு சென்னை தாம்பரத்தில் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது தாயார் மற்றும் குழந்தையுடன் ரயிலில் ஏறி வந்துள்ளார் அவர்களுக்கு அப்பர் பர்த்தில் சீட் இருந்ததால் அந்தப் பெண் லோயர் பர்த் சீட் தருமாறு டிக்கெட் பரிசோதகர் தாமஸிடம் கேட்டுள்ளார். அவர்களுக்கு லோயர் பர்த் ஒதுக்கி கொடுத்துள்ளார் பின்னர் டிக்கெட் பரிசோதகர் தாமஸ் அந்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் கூச்சல் போட்டதை அடுத்து பயணிகள் அங்கு திரண்டதால் அங்கிருந்து தாமஸ் தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் மயிலாடுதுறை ரயில்வே போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் தலைமையிலான போலீசார் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்தது தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தப்பிச்சென்ற டிக்கெட் பரிசோதகர் தாமஸை தேடி வருகின்றனர்.

Similar News