தமிழக அரசை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் தேமுதிக சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
. தேமுதிக சார்பில் தமிழக அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் கே.எஸ்.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். அதனை தொடர்ந்து தமிழகத்தில் பொங்கல் திருநாள் தொகுப்பு திட்டத்தில் குடும்ப அட்டைதார்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்காததை கண்டித்தும், தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சீர்கேடுகளை கண்டித்தும், போதை மற்றும் கஞ்சா பழக்கத்தை தடுக்காததை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.