காரிமங்கலம் வார சந்தையில் தேங்காய் விற்பனை ஜோர்

காரிமங்கலத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் வார சந்தையில் தேங்காய்க 20 லட்சத்திற்கு விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி

Update: 2025-01-07 02:02 GMT
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் பிற்பகலில் தேங்காய் விற்பனைக்காக பிரத்தியேகமாக வார சந்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜனவரி 06 நடைபெற்ற வார சந்தையில், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தேங்காய் விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். மேலும் இந்த சந்தையில் இருந்து வெளி மாநிலங்களுக்கும் தேங்காய் ஏற்றுமதி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது நேற்று அளவைப் பொறுத்து தேங்காய் 10 ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு வரை விற்பனையானது மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 20 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News