ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து சிற்பக்கூட தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து சிற்பக்கூட தொழிலாளி பலி

Update: 2025-01-07 02:45 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குறிப்பன்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த பூதத்தான் மகன் கருப்பசாமி(34). கல் சிற்பக்கூட தொழிலாளியான இவா், குருவன்கோட்டையில் உள்ள தனது பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தடைபட்டதாம். இதனால் அங்குள்ள ஸ்விட்ச் போா்டை கருப்பசாமி, தானாகவே கழற்றி பழுது நீக்க முயன்றாராம். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தாா். சக ஊழியா்கள் அவரை மீட்டு, ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். ஆலங்குளம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். கருப்பசாமிக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.

Similar News