திருவெண்ணெய்நல்லுார் அருகே பெண்ணிடம் பணம் பறித்த இரு வாலிபர்கள் கைது
பெண்ணிடம் பணம் பறித்த இரு வாலிபர்கள் கைது
விழுப்புரம் மாவட்டம் உளுந்துார்பேட்டை அடுத்த கொரட்டூர் கிராமம் முருகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் மனைவி தவமணி, 41; இவர் நேற்று முன்தினம் மாலை 5:20 மணி அளவில் அரசூரில் இருந்து பெரியசேவலை கிராமத்தைச் சார்ந்த அய்யனார் என்பவரின் பைக்கில் திருவெண்ணெய்நல்லூர் வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.கூரானுார் பாதை அருகே தவமணிக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் வண்டியை நிறுத்தி, சாலை ஓரமாக உள்ள ஆற்று மணலில் மயங்கிய நிலையில் படுத்திருந்தார்.அப்போது அவ்வழியாக ஆட்டோவில் வந்த மூன்று மர்ம நபர்கள் அய்யனாரை அடித்து கீழே தள்ளிவிட்டு தவமணி கையில் வைத்திருந்த மொபைல்போன் மற்றும் 3 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றனர்.புகாரின் பேரில் திருவெண்ணைநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். திருவெண்ணெய் நல்லுார் காந்தி நகர் புது காலனியை சேர்ந்த கலியன் மகன் ஜெகதீஸ்வரன், 24; மனோஜ்குமார் மகன் திலீபன், 22; ஆகிய இருவரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.