உலக ஆம்புலன்ஸ் தினம் நேற்று (ஜனவரி 8) கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் தாழை உசேன் நேற்றிரவு தச்சநல்லூரில் ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின் பொழுது எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி காஜா சபீனா உடன் இருந்தார்.