நாமக்கல் சின்ன முதலைப்பட்டியில் பொங்கல் தொகுப்பு வழங்கல்!

நாமக்கல் மாநகராட்சி, சின்ன முதலைப்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை 4 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சசிகலா சௌந்தரபாண்டியன் துவக்கி வைத்தார்.

Update: 2025-01-09 07:10 GMT
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னையில் துவங்கி வைத்தார், அதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திருச்செங்கோட்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு சின்ன முதலைப்பட்டியில் உள்ள நியாய விலை கடையில் கடையில் துவக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் நாமக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சசிகலா சௌந்தரபாண்டியன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு நீள கரும்பை குடும்ப அட்டைதாரருக்கு வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள் லோகநாயகி, மைதிலி, நாகராஜ், ரமேஷ். பொன்னார், கணபதி மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Similar News