ஆசிட் குடித்து மென் பொறியாளர் தற்கொலை
மதுரை அருகே மென் பொறியாளர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வாசன் நகர் ரோஜா 2வது தெருவை சேர்ந்த ராம் பிரசாத் மற்றும் மனைவி ஜானகி( 39) இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஜானகி மென் பொருள் பொறியாளராகவும், ராம் பிரசாத் மருந்து விற்பனை பிரதிநிதி யாகவும் வேலை பார்த்து வந்துள்ளார்கள். இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த மாதம் 19 ம் தேதி ஜானகி வீட்டிலிருந்த கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ஜனவரி 6ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அலங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.