மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சீமான் மீது புகார்

பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகள் புகார்

Update: 2025-01-09 12:27 GMT
. தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்படும் தந்தை பெரியார் மீது பொய்யான செய்திகளைக் கூறி தீய எண்ணத்துடன் அவதூறு பரப்பும் வகையில், காம இச்சை தோன்றினால் தாய், சகோதரியிடம் உறவு வைத்துக்கொள்ளலாம் என பெரியார் கூறியதாக ஆதாரம் இல்லாமல் அவதூறு தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் சென்று புகார் மனு அளித்தனர். மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவக்குமாரிடம் அவர்கள் அளித்த மனுவில், தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்தில் பேசிய சீமானின் மீது தக்க சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Similar News