வெளிமாநில மதுபாட்டில் விற்பனை புகார் அளிக்க செல்போன் எண் வெளியீடு

மயிலாடுதுறையில் டாஸ்மாக் மதுபானக்கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம்:- வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் விற்பனை செய்யப்படுவது குறித்து மதுவிலக்கு அமலாக்கத்துறைக்கு தகவல் தெரிவிக்க புகார் எண் அறிவிப்பு:-;

Update: 2025-01-09 13:35 GMT
மயிலாடுதுறையில் மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பில் டாஸ்மாக் மதுபானக்கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி சுந்தரரேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பழனிவேலு கலந்து கொண்டார். கூட்டத்தில் டிஎஸ்பி சுந்தரரேசன் கூறுகையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் வெளிமாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படவில்லை என்பதை கடை மேற்பார்வையாளர்கள் உறுதி செய்யவேண்டும், அவ்வாறு விற்பனை செய்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அரசு அனுமதித்த நேரத்தில் மட்டும் கடைகளை திறந்திருக்க வேண்டும், பார் உரிமையாளர்கள் உரிய உரிமம் பெற்றே பார்களை நடத்த வேண்டும், அரசு அனுதியில்லாமல் செயல்படும் பார்கள் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் விற்பனை செய்யப்படுவது குறித்து தெரியவந்தால் பொதுமக்கள் 9498158885 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தார். இக்கூட்டத்தில், உதவி மேலாளர் ஜெயபாலன், கோட்ட கலால் அலுவலர் சுகுமாறன், மதுவிலக்கு ஆய்வாளர்கள் அன்னை அபிராமி, ஜெயா மற்றும் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News