கால்பந்து போட்டி : வெற்றி கோப்பையை வென்ற காஜாமியான் பள்ளி
பள்ளிகளுக்கு இடையேயான சாக்கர் கிங் பீலே கால்பந்து போட்டி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது
திருச்சி மாவட்ட கால்பந்து கழகத்தின் சார்பில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான சாக்கர் கிங் பீலே கால்பந்து போட்டி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது. நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டியில் மொத்தம் 12 பள்ளிகளை சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றனர். இதன் இறுதிப் போட்டியில் திருச்சி காஜாமியான் மேல் நிலை பள்ளி மற்றும் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த அணிகள் மோதிக்கொண்டன. இதில் காஜாமியான் மேல் நிலை பள்ளி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் துணை மேயரும் ஆன J.சீனிவாசன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கால்பந்து கழகத்தின் தலைவர் வீர சிவக்குமார் துணை தலைவர்கள் உக்ரமகாளி முனைவர் ஷா இன் ஷா, செயலாளர்கள் செந்தில் குமார் , தம்பிராஜ், இலியாஸ் ஷரீப் பாலையா ஹரிஹர சுதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்