புத்தேரி-சாலபோகம் சாலை சேதம் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

புத்தேரி - -சாலபோகம் இடையே சேதமடைந்த சாலையை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

Update: 2025-01-10 13:42 GMT
காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரியில் இருந்து சாலபோகம் கிராமத்திற்கு செல்லும் தார்ச்சாலை, ஆறு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இவ்வழியாக சென்ற கனரக வாகனங்களாலும், மழை காரணமாகவும், ஆங்காங்கே சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு, ஜல்லி கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ளது. இதனால், மழைக்காலத்தில் சாலை சேதமடைந்த பகுதியில் குட்டைபோல மழை நீர் தேங்குகிறது. சிதறி கிடக்கும் ஜல்லி கற்களால், இருசக்கர வாகனங்களும் அடிக்கடி பழுதாகின்றன. சைக்கிளில் செல்லும் முதியோர், சிறுவர்கள், பெண்கள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள புத்தேரி - -சாலபோகம் இடையே சேதமடைந்த சாலையை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News