கிணற்றில் விழுந்த காட்டெருமைகள் பத்திரமாக மீட்பு

பாலக்கோடு அருகே விவசாய தினத்தில் தவறி விழுந்த காட்டெருமைகள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மிட்பு

Update: 2025-01-11 06:59 GMT
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, வனச்சரகத்துக்கு உட்பட்ட அத்திமுட்லு வனப்பகுதியில் மான், காட்டுப்பன்றி. காட்டெருமைகள் அதிக அளவில் உள்ளன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் வந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர் களை சேதப்படுத்தி செல்கின்றன. இவற்றை வனத்துறையினர். பொதுமக்கள் பட்டாசு வெடித்து வன பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பஞ்சப்பள்ளி அடுத்த நல்லாம்பட்டியில் சிவன் அவரது தோட்டத்திற்கு சென்றார் அப்போது 30 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் இருந்து காட்டெருமை கத்தும் சத்தம் கேட்டது. இத னால் அவர் கிணற்றுக்கு சென்று பார்த்தார். அப்போது 3 காட்டெருமைகள் தண்ணீரில் தத்தளித்துகொண்டு இருந்தன.இதுகுறித்து அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வனத்துறையினர். காவலர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற னர். அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் கிணற்றின் பக்கவாட்டில் மண்ணை தோண்டி வழி ஏற்படுத்தினர். சுமார் பல மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் காட்டெருமைகளை ஒவ்வொன்றாக மீட்டனர். பின்னர் காட்டெருமைகளை அத்திமுட்லு வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டினர். காட்டெருமைகளை பத்திரமாக மீட்டெடுத்த வனத்துறைக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்

Similar News