தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு நெல்லை மகாராஜா நகர் உழவர் சந்தையில் பொதுமக்களின் வசதிக்காக இன்று முதல் வருகின்ற 13ஆம் தேதி வரை காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என சிறப்பு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.