கீழையூர் கிழக்கு ஒன்றியம் சார்பில்
துணை முதல்வர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்
நாகை மாவட்டம் கீழையூர் கடைவீதியில், கீழையூர் கிழக்கு ஒன்றியம் சார்பில், இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு, கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன் தலைமை வகித்தார். கூட்டத்தில், மாவட்ட செயலாளர் என்.கௌதமன், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ரா.சங்கர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ்.பி.டி.சார்லஸ், தலைமை கழக பேச்சாளர்கள் பவானி கண்ணன், புதுக்கோட்டை சுகநிலவன், வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் மரிய சார்லஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், ஒன்றிய அவைத் தலைவர் சுப்பிரமணியன் , மாவட்ட பிரதிநிதிகள் ஞானசேகரன், நரசிம்மன், ராம.இளம்பரிதி, ஒன்றிய துணை செயலாளர்கள் அருள் செந்தில், ரவிச்சந்திரன், அனுசியா ஜோதிபாசு, ஒன்றிய பிரதிநிதி கந்தையன், முன்னாள் ஒன்றிய துணை தலைவர் சௌரிராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டேனியல் சத்யா, பன்னீர்செல்வம், மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் ரபிக், மாவட்ட ஆதி திராவிடர் அணி துணை அமைப்பாளர் ஜோதிபாஸ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் புகழேந்திரன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அழகு நிர்மல் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.