நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் சமீபத்தில் பெரியாரை அவதூறாக பேசிய விவாகரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.திக, திமுக,அதிமுக, விசிக என பல கட்சிகள் கண்டணம் தெரிவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 60 க்கும் மேற்பட்ட புகார்கள் போலீஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திமுக பிரமுகர்களான செல்வின் சதீஷ் குமார் மற்றும் ஆன்றனி ராஜ் அவர்கள் நாகர்கோவிலில் அமைந்துள்ள கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில், - பல நூற்றாண்டுகளாக ஆணாதிக்கத்தினால் அடிமைகளாக இருந்த பெண்ணினத்தின் விடுதலைக்காகப் போராடி, பெண்ணினத்தின் விடுதலைப் பாதைக்கு வித்திட்ட தந்தை பெரியாரை அநாகரிகமாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளனர்.