தமிழக முதல்வருடன் அமைச்சர் கீதாஜீவன் சந்திப்பு

தமிழக முதல்வர் மு.க. ஸடாலினை அமைச்சர கீதாஜீவன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

Update: 2025-01-12 11:03 GMT
தமிழக முதல்வர் மு.க. ஸடாலினை அமைச்சர கீதாஜீவன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதா அவையில் இன்று நிறைவேறியது. இதன்படி, 2025 தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனைகள் கடுமையாக்கப்படும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், பெண்களை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையும் வழங்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆளுனர் உரை மீதான விவாத்திற்கு முதலமைச்சர் சட்டப்பேரவையில் பதிலுரை அளிக்க உள்ளதை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் மரியாதை நிமித்தம் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

Similar News