இதயா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா.
பல்வேறு துறை தலைவர்களும் ஆசிரியர்களும் மாணவிகளும் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் இதயா மகளிர் கலை கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா கல்லூரி செயலாளர் அருட்சகோதரி சம்பூர்ணமேரி தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் லூர்துமேரி , அருட்சகோதரி மேரிசந்தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக செங்கம் வழக்கறிஞர் சென்னம்மாள் பங்கேற்று தமிழ் பாரம்பரிய குறித்தும் சட்டங்கள் பற்றியும் மாணவிகளிடம் சிறப்புரையாற்றினார் இந்நிகழ்வில் பல்வேறு துறை தலைவர்களும் ஆசிரியர்களும் மாணவிகளும் கலந்து கொண்டனர்.