சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் சின்ன காஞ்சியில் விபத்து அபாயம்
சின்ன காஞ்சிபுரம் பெரியார் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் வாகனங்களை நிறுத்த போலீசார் தடைவிதிக்க வேண்டும் என, கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர் வழியாக வாலாஜாபாத், படப்பை, ஒரகடம், தாம்பரம், செங்கல்பட்டு, கல்பாக்கம், மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையோரம் உள்ள நடைபாதையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வரும் வெளியூர் சுற்றுலா பயணியரின் கார்,வேன், பேருந்து மட்டுமின்றி ஜே.சி.பி., வாகனமும் நிறுத்தப்படுகிறது. இதனால், சாலையோர நடைபாதையில் நடந்து செல்ல வேண்டிய பாதசாரிகள், சாலையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும், ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்தும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சின்ன காஞ்சிபுரம் பெரியார் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் வாகனங்களை நிறுத்த போலீசார் தடைவிதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.