அரசு பள்ளியில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது

நகராட்சி துவக்கப் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது;

Update: 2025-01-13 12:51 GMT
தமிழகம் முழுக்க கல்லூரி மற்றும் பள்ளிகளில்  பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது., இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் செயல்படும் அரசு நகராட்சி  துவக்கப் பள்ளியில்  சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி சிறப்பாக பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது.,இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் செல்வராஜ்,  துணைத்தலைவர் பாலமுருகன், நகர் அமைத்தலைவர் குலோப் ஜான் ,பள்ளி தலைமை ஆசிரியை ,வார்டு உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.  நடைபெற்ற பொங்கல் விழாவில் பள்ளியில்  பயிலும் மாணவ மாணவிகள் வேஷ்டி சேலை அணிந்து பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் விதமாக கிராமிய பாடல், வள்ளி கும்மி  நடனம்,கரகாட்டம், கோலாட்டம் இசை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்து

Similar News