ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் கலை கட்டிய பொங்கல்

ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் சமத்துவ பொங்கல் வெகு விமர்சையாக நடைபெற்றது.;

Update: 2025-01-13 15:07 GMT
அரியலூர், ஜன.14- ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் போலீஸார்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கொண்டாடினர்* அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது மஞ்சள் கொத்து சுற்றப்பட்ட புது பானையில் பச்சரிசியை இட்டு சமத்துவ பொங்கல் விழாவை போலீஸ் இன்ஸ்பெக்டர் தொடங்கி வைத்தார். பொங்கல் பானை பொங்கிய போது பொங்கலோ பொங்கல் என கூறி ஆரவாரம் செய்தனர். இதனையடுத்து செங்கரும்பு மார்விலை, தோரணங்கள் மத்தியில் பொங்கல் படையலிட்டு இறைவனை வழிபட்டனர். இதனையடுத்து பொங்கலை போலீசார்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் முன்னிலை வகித்தார்.முன்னதாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விமலா வரவேற்றனர்.போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், ஆதி தலைமை காவலர் கணேசன் உள்ளிட்ட போலீசார்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வந்திருந்த அனைத்து போலீசாருக்கும், வழக்கு சம்பந்தமாக வந்தவர்களுக்கும், பொது மக்களுக்கும் பொங்கல் வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்..

Similar News