உழவர்சந்தை வெள்ளிவிழா நலத்திட்ட உதவி வழங்கல்
உழவர்சந்தை நலத்திட்ட உதவி வழங்கல்;
திண்டிவனம் உழவர்சந்தை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, திண்டிவனம் அரிமா சங்கம் இணைந்து நடத்திய விழாவிற்கு, சப்கலெக்டர் திவ்யான்சு நிகம் தலைமை தாங்கினார். வேளாண் துணை இயக்குநர் சுமதி வரவேற்றார். நகராட்சி கமிஷனர் குமரன், சேர்மன் நிர்மலா ரவிச்சந்திரன், அரிமா முன்னாள் மாவட்ட ஆளுநர் முரளி முன்னிலை வகித்தனர்.மஸ்தான் எம்.எல்.ஏ., விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். விழாவில், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் சேகர், நகர செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ரமணன், பொதுக்குழு உறுப்பினர் கதிரசேன், மேல்சித்தாமூர் ஜினகஞ்சி ஜெயின் மடத்தின் லட்சுமிசேன பட்டாரக சுவாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக உழவர்சந்தை வளாகத்தில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. உழவர்சந்தை நிர்வாக அலுவலர் கருப்பையா நன்றி கூறினார்.