கவுன்சிலர்களுக்கு மேயர் சுற்றறிக்கை
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி அவர்கள் கவுன்சிலர்களுக்கு சுற்றறிக்கை
காஞ்சிபுரம் மாநகராட்சிகூட்டம், மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் பிரச்னையால், கடந்தாண்டு ஏழு மாதங்கள் கூட்டம் நடத்த முடியாமல் போனது. அப்பிரச்னை முடிவுக்கு வந்த பின், வழக்கம்போல் மாநகராட்சி கூட்டம் நடக்க துவங்கியுள்ளது. 2024 நவம்பர் மாதம், கடைசியாக மாநகராட்சி கூட்டம் நடந்தது. இதையடுத்து, 2025ம் ஆண்டு துவங்கிய நிலையில், இம்மாத இறுதியில் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி கூட்டத்தில் இடம் பெற வேண்டியதீர்மானங்கள் தயார் செய் வதற்காக, கவுன்சிலர்களிடம் கோரிக்கை கடிதம் கேட்டு, மேயர் மகாலட்சுமிகவுன்சிலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இம்மாதம் 20ம் தேதிக்குள் கடிதம் கொடுக்க கேட்கப்பட்டுள்ளது.